Photo Album: விஜயுடன் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? பலரும் அறியாத ரகசியம்
நடிகர் விஜயுடன் பிரபல நடிகர் ஒருவர் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் இளவரசு
தமிழ் சினிமாவிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி அதன் பின் நடிகராக களமிறங்கியவர் தான் நடிகர் இளவரசு.
இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் படங்களில் காணக்கூடியதாக இருக்கும். இவரின் யதார்த்தமான நடிப்புக்கு இன்றும் தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் “முத்துக்கு முத்தாக“ திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து பலரின் நெஞ்சங்களை இளவரசு கவர்ந்திருப்பார்.
இப்படியொரு நிலையில் நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் பல அடிகள் வாங்கியிருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான “பூவே உனக்காக..” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இவர் யார் தெரியுமா?
அந்தப் படத்தில் “மச்சினிச்சி வர்ர நேரம் மண் மணக்குது” என்ற பாடலின் படப்பிடிப்பு நடைபெறும். அதில் முரளி நடனமாடியிருப்பார்.
அந்தப் பாடல் படப்பிடிப்பின் போது விஜய் ஓரமாக இந்து வேடிக்கை பார்ப்பார். அந்த சமயத்தில் விஜய் ஒருவர் மீது கை வைத்து நின்று கொண்டிருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை. நம் பலரும் அறிந்த நடிகர் இளவரசு தான்.
மேலும் இவர், கருத்தம்மா, பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களை இளவரசு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
            
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        