மிகவும் வலி கொடுக்கும் அதை சமந்தா உடனே நிறுத்த வேண்டும்! சக நடிகரின் அதிர்ச்சி பதிவு
நடிகை சமந்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சக நடிகர் ஒருவர் கொடுத்துள்ள அறிவுரை ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது மருத்துவமனையிலிருந்து வந்துள்ள சமந்தா மெதுவாக இயல்புநிலைக்கு திரும்பும் இவர், சில தருணங்களில் கடுமையான உடற்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றார்.
விரைவில் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் உடற்பயிற்சி மேற்கொள்வதை அவதானிக்கும் பலரும், அதிர்ச்சியடையவும் செய்கின்றனர்.
ஆனாலும் சமந்தாவின் இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் கிடைத்து வரும் நிலையில் அவருடன் ’தி ஃபேமிலி மேன் 2 ’ என்ற வெப் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு அறிவுரை தெரிவித்துள்ளார்.
சமந்தா மிகவும் கடினமான உழைப்பாளி என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் மிகவும் வலி கொடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளை நிறுத்த வேண்டும், எளிமையான உடற்பயிற்சிகளை மட்டும் இப்போதைக்கு அவர் செய்ய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.