500 ரூபாய் நோட்டில் கிடைத்த பேரதிர்ச்சி: உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கின்றதா?
இன்றைய காலத்தில் பாமர மக்கள் கள்ள நோட்டுகளை கண்டறிவதில் பெரும் சிக்கலை எதிர் கொள்கின்றனர்.
அதிலும் பெரிய தொகையான 500 மற்றம் 2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகளை கண்டறிவது பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் போலியான 500 ரூபாய் நோட்டுக்களை எவ்வாறு கண்டறிவது என்ற காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியில் அசல் மற்றும் போலியான இரண்டு 500 ரூபாய் நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் விளக்கப்படுகின்றது.
இந்த வீடியோவைப் பற்றி PIB கூறுகையில், 'ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் பச்சை நிற கோடு இல்லாமல், காந்தியடிகளின் படம் அருகில் பச்சைக் கோடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளைப் பெறக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்.' என்று கூறப்பட்டுள்ளது.