மோனலிசா ஓவியம் இத்தனை கோடிக்கு ஏலமா? அதுவும் போலியானதாம்
போலியான மோனலிசா ஓவியம் ரூ.25 கோடிக்கு ஏலம் போகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியானார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் மக்கள் அனைவருக்கும் மிகவும் தெரிந்தது. அந்த ஓவியம் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லூவர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மோனலிசா ஓவியம் போலவே பல போலியான ஓவியங்கள் உள்ளன. கடந்த 1953ம் ஆண்டு பிரான்சில் உள்ள கடையில் இருந்த மோனலிசா ஓவியத்தை வாங்கியுள்ளார் ரேமண்ட் ஹேக்கிங் என்பவர்.
தான் வைத்திருந்த அந்த ஓவியம் காணாமல் போன மோனலிசா ஓவியம் என்று நினைத்திருந்தார். அவர் தற்போது 68 ஆண்டுகள் கழித்து அந்த ஓவியத்தை ஆன்லைனில் ஏலத்திற்கு விற்றுள்ளார்.
அந்த ஓவியம் சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு தொடங்கியுள்ளது. ஆனால், ஏலத்தின் முடிவில் ரூ.25 கோடிக்கு ஏலம் போயுள்ளது.