ஒரே படத்தில் ட்ரெண்டான பகத் பாசில் இத்தனை சொத்துக்களுக்கு அதிபதியா?
மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ட்ரெண்டாகி வரும் பகத் பாசிலின் சொத்து விபரம் தற்போது வெளியாகி இருக்கிறது.
பகத் பாசில்
தற்போது அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் பகத் பாசில் மலையாள திரை உலகில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்.
மலையாள சினிமாவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்று பல ரசிகர்களை சம்பாதித்துக் கொண்ட இவர் தமிழில் வேலைக்காரன்,சூப்பர் டீலக்ஸ், புஷ்பா, விக்ரம் என சில படங்களில் நடித்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதையை தெரிவு செய்து ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
மேலும், இவர் தமிழில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரியாக்சன் குயின் ஆக இருக்கும் நஸ்ரியாவை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் 12 வருட வயது வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்து மிகவும் ட்ரெண்டாகி விட்டார்.
மேலும், இன்று இவர் தனது 41 பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
சொத்துமதிப்பு
இந்நிலையில் தற்போது பகத் பாசிலின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரிடம் கடந்த ஆண்டு 36 கோடி சொத்து இருந்தது.
இந்த ஆண்டு பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதால் தற்போது 50 கோடிக்கு உயர்ந்துள்ளது. இவர் மலையாள திரைப்படங்களுக்கு 70 இலிருந்து 80 இலட்சம் வரைக்கும் சம்பளம் வாங்குகிறார்.
மேலும், தமிழில் விக்ரம் படத்திற்கு மாத்திரம் 4 கோடி மாத்திரம் வாங்கியிருக்கிறார். மேலும் மாமன்னம் திரைப்படத்திற்கு 5 கோடியும் சம்பளம் பெற்றிருக்கிறார். இவரிடம் பச்சை நிற Porsche 911 Carrera S என்கிற ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக வைத்திருக்கிறார்.
மேலும், 70 இலட்சம் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், ரூ.2.35 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் Vogue போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |