ரத்னவேலுவாக மாறிய பகத் பாசில்: ட்ரெண்டிங்கில் தெறிக்க விடும் கவர் போட்டோ!
மாமன்னன் திரைப்படத்தில் ரத்னவேலுவாக நடித்த பகத்பாசிலுக்கு அதிக வரவேற்பு கொடுத்து ட்ரெண்டாகி வருகின்றார்.
பகத் பாசில்
தற்போது அதிகம் ட்ரெண்டிங்கில் இருக்கும் பகத் பாசில் மலையாள திரை உலகில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார்.
மலையாள சினிமாவில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்று பல ரசிகர்களை சம்பாதித்துக் கொண்ட இவர் தமிழில் வேலைக்காரன்,சூப்பர் டீலக்ஸ், புஷ்பா, விக்ரம் என சில படங்களில் நடித்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதையை தெரிவு செய்து ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.
மேலும், இவர் தமிழில் நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரியாக்சன் குயின் ஆக இருக்கும் நஸ்ரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் 12 வருட வயது வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் ஆகும் போட்டோ
மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாசில் வரும் காட்சிகள் எல்லாம் சாதிப் பாடல்களுடன் இணைத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். வீடியோக்கள் மட்டுமல்லாமல் மீம்ஸ்கள் மற்றும் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை முழுவதுமாக அறிந்துக் கொண்ட பகத் பாசில் பேஸ்புக் பக்கத்தில் கவர் போட்டோவாக மாமன்னன் ரத்னவேலுவாக இருக்கும் போட்டோவை வைத்திருக்கிறார்.
இந்தப் புகைப்படத்திற்கு சாதிப் பெயரை வைத்து பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |