விரதம் தொடர்பில் நீங்கள் அறியாத உண்மைகள்!
Horoscope
Astrology
Hinduism
By DHUSHI
பொதுவாக எல்லா மாதத்தை சார்ந்தவர்களும் விரதம் என்ற ஒன்றை கடைபிடிக்கப்பார்கள். அப்படியான விரதங்களை சிலர் குழந்தைகளுக்காகவும், கணவருக்காகவும் இருப்பார்கள்.
விரதங்கள் இருந்து இறைவனிடம் ஏதோவொன்றை கேட்கும் பொழுது, அது நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் எந்த விரதத்தை கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெடர்ந்து பார்க்கலாம்.
விரதங்களின் மகிமை
- சங்கடஹர சதுர்த்தி:- தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதிலும் குடும்பத்திலும் அமைதி நிலவும்.
- விநாயக சதுர்த்தி:- வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகரின் பூரணமான அருள் கிட்டும்.
- சரவண விரதம்:- குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி, ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும்.
- சஷ்டி விரதம்:- மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியங்கள் எம்மை சூழும்.
- வைகுண்ட ஏகாதசி:- குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும்.
- கோகுலாஷ்டமி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
- கவுரி விரதம்:- குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும்.
- வரலட்சுமி விரதம்:- மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும்.
- பிரதோஷ விரதம்:- மன அமைதி கிடைத்திடும், நீண்ட ஆயுள் அமைந்திடும்.
- செல்வ வளம் பெருகிடும். மகா சிவராத்திரி:- சிவபெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
- வைகாசி விசாகம்:- நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவர்.
- நவராத்திரி விரதம்:- மனநலம், நீண்ட ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.
- அமாவாசை விரதம்:- பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும்.
- பவுர்ணமி விரதம்:- வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.
- கார்த்திகை விரதம்:- எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிட்டும்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US