ஒரு மனிதனுக்கு உயிராபத்தை ஏற்படுத்த கூடிய G-விசை! அசால்ட் பண்ணும் ஏகோர்ன் மரங்கொத்தி
சமூக ஊடகங்களில் பிரபவலமாக இருக்கும் நபரொருவர் தற்போது வெளியிட்டுள்ள ஏகோர்ன் மரங்கொத்தி தொடர்பான வியக்க வைக்கும் விடயங்கள் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஏகோர்ன் மரங்கொத்தி
ஏகோர்ன் மரங்கொத்தி, மேற்கு ஓரிகான், கலிபோர்னியா மற்றும் வறண்ட அமெரிக்க தென்மேற்கு (மேற்கு டெக்சாஸ் உட்பட), மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க மலைப்பகுதிகள் வழியாக கொலம்பியா வரையிலான அடிவார மற்றும் மலைப்பகுதி வனப்பகுதிகளில் வாழும் ஒரு மரங்கொத்தி இனமாகும்.
இந்த மரங்கொத்தி பறவைகள் அமெரிக்காவில் காணப்படும் ஓக் மரங்களின் (குவர்கஸ் இனங்கள்) இருப்புடன் மிக நெருக்கமாக தொடர் கொண்டுள்ளது. அதாவது இந்த மரங்களின் காய்களான ஏகோர்ன் எனப்படும் காய்களை தான் இந்த பறவைகள் உணவாக உட்கொள்கின்றது.
அதிக அளவிலான ஏகோர்ன்கள் காய்களை இந்தப் பறவைகள் மரங்களில் துளையிட்டு சேமிக்த்து வைத்து பனிக்காலத்தில் அதனை உணவாக உட்கொள்கின்றது. இதனால் இந்த மரங்கொத்தி பறவைகளுக்கு ஏகோர்ன் மரங்கொத்தி என்ற பெயர் வந்துள்ளது.
இந்த காய்களை அவை மரங்களில் துளையிட்டு பதித்து வைக்க, 1200 முதல் 1400 வரையிலான G-விசையை பயன்படுத்துகின்றது. இந்தளவு விசை மனிதர்களுக்கு ஆபத்தானது, அதாவது இதனை மனித தலை அனுபவிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு உறுதி.
இந்த விசை மனிதர்கள் ஒரு கணத்திற்கு மேல் தாங்கக்கூடியதை விட மிக மிக அதிகம். மனிதர்கள் வெறும் 60 தொடக்கம் 100 வரையிலான G-விசையை அனுபவித்தால் கூட மூளை செயலிந்து போகும் வாய்ப்பு காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தளவுக்கு அசாத்திய அறிவாற்றல் மற்றும் திறமை கொண்ட ஏகோர்ன் மரங்கொத்தி தொடர்பான வியக்க வைக்கும் சுவாரஸ்யமான விடயங்கள் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |