பெயரை மாற்றுகிறது பேஸ்புக்? காரணம் இதுதானாம்

facebook mark zuckerberg facebook name change
By Fathima Oct 20, 2021 07:36 AM GMT
Fathima

Fathima

Report
Courtesy: Dinamani

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் (முகநூல்) பெயர் மாற்றப்படவுள்ளதாக தி வேர்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை ஆண்டு தொடர்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஊகங்கள், வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக்கின் வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ள நிலையில், பெயர் மாற்றவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஜனநாயக, குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேஸ்புக் குறித்து கடும் விமரிசனங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

பேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில், மற்ற சமூக வலைதளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளை நிறுவனமாக மாறும். பேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது இயங்கிவருகிறது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் நிறுவனங்கள் பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் புதிதான ஒன்றல்ல. சேவைகளை விரிவுப்படுத்த நினைக்கும் போது பெயரை மாற்றிக் கொள்ளும்.

தேடல் இயந்திரம் மற்றும் விளம்பர வர்த்தகத்தை தாண்டி வணிகத்தை விரிவுப்படுத்த நினைத்த கூகுள், கடந்த 2015ஆம் ஆண்டு, ஆல்பாபெட் ஐஎன்சி என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கியது. ஆட்டோமொபைல் ஆலைகள், சுகாதார தொழில்நுட்பம், தொலைதூர இடங்களில் இணைய சேவை அளிப்பது உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஆல்பாபெட் ஐஎன்சி கீழ் இயங்கிவருகிறது.

மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது. இதற்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றவிருக்கிறது. மெடாவெர்ஸ் என்பது இணைய உலகமாகும். பல்வேறு கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் இந்த உலகின் நகர முடியும் மற்றவர்களிடம் பேச முடியும்.

மெய்நிகர் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) ஆகியவற்றில் பேஸ்புக் அதிக முதலீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பயனர்களை இந்த சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் இணைக்க பேஸ்புக் திட்டமிட்டிருக்கிறது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மெய்நிகர் உலகை படைக்கும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை நிறுவனம் பேஸ்புக் அறிவித்தது.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US