முகம்பார்க்காத முகநூல் காதல்! போனில் பெண்ணின் பாட்டி கூறிய அதிர்ச்சி தகவல்
முகநூலில் முகம் பார்க்காமல் காதலித்த காதலி திடீரென இறந்த நிலையில், துக்கம் தாங்காமல் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்திய மாநிலம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலத்தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(26). 8ம் வகுப்பு வரை படித்த இவர் சொந்தமாக ஸ்டூடியோ வைத்து புகைப்படம் எடுத்து வந்துள்ளார்.
இவருக்கு முகநூல் மூலம் பூமிகா என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் நண்பராக இருந்த நிலையில், காதலாக மாறியுள்ளது.
முகம் பார்க்காத காதல்
முகநூலில் பேசிவந்த இவர் நேரில் அவதானித்து காதலைக் கூற வேண்டும் என்று நினைக்கையில், காரணம் இல்லாமல் தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில் திடீரென பூமிகா முகநூலிற்கு வராமல் இருந்ததால், மணிகண்டன் அவரிடம் பேசமுடியாமல் தவித்துள்ளார்.
தொடர்ந்து பூமிகாவிற்கு போன் செய்து கொண்டிருந்த மணிகண்டனின் போனை ஒருநாள் பூமிகாவின் பாட்டி எடுத்துள்ளார்.
பூமிகா குறித்து விசாரித்த மணிகண்டனுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஆம் பூமிகா இதயநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் அரங்கேறிய தற்கொலை
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த மணிகன்டன் மீளமுடியாமல் தவித்த நிலையில், ஒருநாள் விஷம் குடித்து மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சியில் பொலிசார்
பின்பு பொலிசாரிடம் மணிகண்டனின் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது காதலியின் ஊர் பற்றி கேட்டதற்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார். பூமிகா எந்த ஊரை சேர்ந்தவர் என்பது மணிகண்டனுக்கே தெரியாதாம். மேலும் அவரது முகத்தையும் நேரில் பார்த்தது இல்லை என்ற விபரம் கிடைத்துள்ளது.
இதயப்பூர்வமாக நேசித்த ஒரு பெண்ணுக்காக, தன் உயிரையும் இழக்க துணிந்த மணிகண்டனின் காதல், தமிழக மக்களையே வாயடைக்க வைத்துள்ளது.
சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்