பேஸ்புக் வலைத்தளத்தின் புதிய பெயரை வெளியிட்ட மார்க் - என்ன தெரியுமா?
சமூக வலைத்தளத்தின் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வந்தது.
இதனால், பயனளார்களின் கடும் அதிருப்தியால், பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருட மாநாட்டில் பல விஷயங்களை பகிர்ந்து மாற்றி இருக்கின்றனர்.
அப்போது பேசிய, மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.
மேலும், அவர் கூறி இருப்பதாவது, சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம்.
கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்து இருக்கிறார்.
அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என தெரிவித்து உள்ளார்.
Facebook unveiled a new name and logo at its headquarters in Menlo Park, California, replacing its thumbs-up ‘Like’ logo with a blue infinity shape https://t.co/R7BBy1x2bM $FBO pic.twitter.com/z9GfE4MGBb
— Reuters (@Reuters) October 28, 2021