வாரம் இரு முறை இந்த ஸ்கிரப் போடுங்க - கரும்புள்ளி இருந்த இடமே தெரியாது
இன்றைய நாளில் அதிகமானோர் சந்திக்கும் பொதுவான ஒரு சரும பிரச்சனை கரும்புள்ளிகள். குறிப்பாக மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றும் இந்த கரும்புள்ளிகள், சருமத்தின் மென்மைதன்மையை பாதிக்கும்.
மேலும் முகத்தின்அழகையே கெடுக்கும். இதற்கு பலரும் கரும்புள்ளிகளை நீக்க ஃபேஸ் ஸ்க்ரப்புகள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதில் இருக்கும் கெமிக்கல்கள் சருமத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். இது இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு முகத்தை கரும்புள்ளிகள் விட்டு நீக்க முடியும்.
கரும்புள்ளி ஸ்கிரப்
எலுமிச்சை + உப்பு ஸ்க்ரப் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பை கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமாக கழுவி துடைத்த பின், இந்த கலவையை முகத்தில் மென்மையாக தடவி 2-3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இது கரும்புள்ளிகளை அகற்றவும், முகத்தை பளபளப்பாக மாற்றவும் உதவும்.
சந்தன பவுடர் + ஜாதிக்காய் + பால் ஸ்க்ரப் ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ஜாதிக்காய் பவுடரைச் சேர்த்து, பால் கலந்து பேஸ்ட் உருவாக்கவும். முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊற விடவும். பின் கை ஓரளவுக்கு ஈரமாக இருக்க, மென்மையாக தேய்த்து கழுவவும். இது சருமத் துளைகளை சுருக்கி, கரும்புள்ளிகளை குறைக்கும்.
வெள்ளரிக்காய் சாறு + நாட்டுச்சர்க்கரை ஸ்க்ரப் ஒரு ஸ்பூன் நாட்டுச்சர்க்கரையில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலக்கவும். முகத்தில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இது சருமத்தை குளிர்ச்சியுடன் பராமரித்து, கரும்புள்ளிகளை அகற்றும்.
பட்டை பொடி + தேன் ஸ்க்ரப் ஒரு ஸ்பூன் பட்டை பொடியில் தேன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி 2–3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும். முதலில் வெதுவெதுப்பான நீரால், பிறகு குளிர்ந்த நீரால் முகம் கழுவவும்.
இது சருமத்திலுள்ள அழுக்குகளை அகற்றி, இயற்கையான பளிச்செலுத்தலை வழங்கும். இவற்றை வாரத்தில் 2–3 முறை தொடர்ந்து பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் குறைந்து, முகம் தெளிவாகவும், ஆரோக்கியமாகவும் மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
