வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
தீட்டமற்ற தேங்காய் எண்ணெய் இல்லாத வீடுகள் இன்று கிடையாது என்றே சொல்லலாம். சமையல் முதல் கூந்தல் பராமரிப்பு, சரும நலன் என எண்ணெயின் பயன்பாடு ஏராளம்.
நாம் பலரும் தேங்காய் எண்ணெயின் பயன்களை தெரிந்தவர்களாக இருந்தாலும், அதனை ஒரு மருத்துவ மருந்தாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அதன்படி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடிப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும். பொதுவாக அதிகமானோர் காலை எழுந்தவுடன் வெந்நீர், டீ, காபி அல்லது ஜூஸ் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் இவற்றுக்கு மாற்றாக, ஒரு ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயைக் குடிப்பதை தினசரி பழக்கமாக மாற்றினால், உடல்நலத்தில் பாரிய மாற்றங்களை உணர முடியும்.
வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய்
எடை இழப்புக்கு : உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினசரி காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம். இதில் உள்ள நல்ல கொழுப்பு (Good Fat) மெதுவாக ஜீரணமாகி நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக இருக்க உதவுகிறது.
இதன் மூலம், இடைவேளையில் தவறான உணவுப் பழக்கங்களை தவிர்க்க முடியும். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, பசி உணர்வை குறைக்கிறது – எடை குறைப்புக்கு இது மிகவும் உதவியாக அமையும்.
PCOS/நீர்க்கட்டி பிரச்சனையில் நன்மை : நீர்க்கட்டி (PCOS) பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய சிக்கலாக இருக்கும். தேங்காய் எண்ணெய், கொழுப்பு வாய்ந்தது என்பதால், ஜீரணத்தில் தாமதம் ஏற்படுகிறது.
இதன் விளைவாக, இரத்த சர்க்கரையின் நிலை ஒருமுறையாகச் சீராகும். தொடர்ச்சியாக வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொண்டால், இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை கட்டுப்படுத்தி, ஹார்மோன் சீரமடையும் வாய்ப்பு உள்ளது.
மூல நோய்க்கு நிவாரணம் : மூல நோயால் பாதிக்கப்படும் போது, மலக் கழிவதில் வலி, கடுமை ஆகியவை ஏற்படும். இதற்கு தீர்வாக, வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பது மிகுந்த நன்மை தருகிறது.
ஓமெகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த இந்த எண்ணெய், மலம் கழிப்பதை மென்மையாக செய்து, மலச்சிக்கலையும் குறைக்கும். சில நாட்களிலேயே வலி மற்றும் சிரமங்களில் நிவாரணம் கிடைக்கும்.
பருவகால நோய்களை தடுக்கும் : வயரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
பருவகாலங்களில் எளிதில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடியவர்கள், வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால், நோய்களை தடுக்க உடல் பலம் பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
