தீபாவளிக்கு முகம் பளிங்கு போல் ஜொலிக்கணுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக் போடுங்க!
பொதுவாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.
இந்த பண்டிகைக்கு புதிய ஆடை அணிந்து, பலகாரங்கள் செய்து, பட்டாசு போட்டு இப்படி ஏகப்பட்ட சம்பவங்களை செய்து பிரமாண்டமாக கொண்டாடுவார்கள்.
அப்படிப்பட்ட தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் அழகாக ஜொலிக்க விரும்பாத பெண்களே இருக்கமாட்டார்கள்.
அந்த வகையில் புதிய ஆடைகளுக்கேற்ப புதிதாக தோன்ற ஒரு பேஸ் பேக். எப்படி செய்வது என பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
- மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி
- கடலை மா - 1 மேசைக்கரண்டி
- ரோஸ் வாட்டர்- கொஞ்சமாக
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்ட பொருட்களை பவுலில் போட்டு கலந்து கொள்ளவும்.
பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு பேக்கை முகத்திற்கு தடவவும்.
சரியாக 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை மசாஜ் செய்து கழுவும்.
இப்படி வாரத்திற்கு 3 தடவைகள் செய்தால் முகத்திலுள்ள தேவையற்ற செல்கள் சென்று முகம் பளிங்கு கற்கள் போல் ஜொலிக்கும்.
முக்கிய குறிப்பு
ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை நாடி பின்னர் பேக்கை தொடர்ந்து போடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |