வெயில் காலம் தொடங்கியாச்சு? முகத்தை பளபளக்க வைக்க இதை மறக்காமல் செய்திடுங்க
Skin Care
By Sinduja
கொஞ்ச நேரம் வெயிலில் வெளியில் சென்று, வீட்டுக்கு திரும்பினால் போதும். முகத்திலுள்ள பொலிவு இல்லாமல்போய், முகம் கருத்துப்போய் முகத்தில் கை வைத்து தேய்த்தால்கூட எரிய ஆரம்பித்துவிடும்.
அதுமட்டுமில்லாமல் முகத்திலுள்ள வியர்வை அப்படியே உள்ளே சென்று விஷப்பருக்களாக மாற்றமடையும். இலகுவில் மறையாது. எனவே அதனை சரி செய்வதற்கு இயற்கையான பொருட்களை வைத்து செய்த மூலிகை பேஸ்ட்கள் சிறந்ததாக இருக்கும்.
அவ்வாறு முகத்துக்கு சிறந்த பொலிவைக் கொடுக்கக்கூடிய மூலிகை பேஸ்ட்டை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
- புதினா இலை - 20
- பப்பாளிப்பழம் - ஒரு துண்டு
- சகசா - சிறிதளவு
- கருஞ்சீரகம் - சிறிதளவு
செய்முறை
- புதினாவை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- கசகசா ஒரு கரண்டி, கருஞ்சீரகம் ஒரு கரண்டி இவை இரண்டையும் நன்றாக அரைத்து பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அரைத்த கசகசா, கருஞ்சீரக கலவையை புதினாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பப்பாளியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் முகத்துக்கு பூசிவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
குறிப்பு : இதை செய்து வைக்கக்கூடாது. அன்றாடம் தயாரித்து முகத்தில் பூசி முகத்தை கழுவ வேண்டும்.
நன்மைகள்
- முகம் அழகு கூடும்.
- முகத்தில் சொர சொரப்பான இடங்களில் இந்த பேஸ்ட்டை தடவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
- கண் மற்றும் முகத்துக்கு குளிர்மையைக் கொடுக்கும்.
- முகத்திலுள்ள அழுக்குகள் நீங்கும்.
- கசகசா முகத்திலுள்ள பள்ளங்களை சரிசெய்யும்.
- கருஞ்சீரகம் தோலின் நிறத்தை மாற்றும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US