கரும்புள்ளிகளை ஒரே இரவில் அகற்ற வேண்டுமா? அப்போ இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்க
கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி நம் சரும அழகையே கெடுத்துவிடுகின்றன.
அதை ஒரே இரவில் அகற்றக்கூடிய வெள்ளிரிக்காய் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
வெள்ளரிக்காயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சரும நிறத்தை அதிகரித்தல், வயதான தோற்றத்தை தடுத்தல் போன்வற்றிற்கு உதவும்.
மேலும் வீங்கிய கண்களை சரிசெய்தல், கருவளையம் மறைய வைத்தால் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
Helen Rushbrook/Stocksy United
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய் சாறு- 2 ஸ்பூன்
- மஞ்சள்- 1/2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பௌலில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் மஞ்சள் சேர்க்க வேண்டும்.
அத்துடன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் கரும்புள்ளி இருக்கும் இடத்தில தடவ வேண்டும்.
இதன் பின் சுமார் 15 நிமிடத்திற்கு அப்படியே விடவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்து கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் சாற்றில் உள்ள இயற்கையான பண்புகள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச்செய்து ஒரே இரவில் சுத்தமான சருமத்தை பெற உதவுகிறது.