பாக்கியலட்சுமியில் கணேஷை சந்தித்த அமிர்தா, எழில்... எதிர்பாராத பரபரப்பு ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் கோவிலுக்கு சென்ற அமிர்தா, எழில் இருவரும் கணேஷை அவதானித்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். ஒருபுறம் ஜெனியின் விவாகரத்து பிரச்சினை மற்றொரு புறம் அமிர்தாவின் முன்னாள் கணவர் என அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார்.
ஜெனி அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்... அமிர்தாவிற்கு நெருக்கடி கொடுக்கும் கணேஷ்! பரிதவிப்பில் பாக்கியா
இந்நிலையில் அமிர்தாவை கோவிலில் வைத்து கணேஷ் சந்தித்துள்ளார். மேலும் எழிலையும் நேருக்கு நேர் சந்தித்துள்ளார். இதனால் இனி பாக்கியலட்சுமி சீரியல் எவ்வாறு செல்லும் என்ற கேள்வி அதிகமாகவே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |