லேப்டாப், செல்போன் அதிகமாக பார்ப்பவரா நீங்கள்? இந்த 7 விடயத்தை மட்டும் மறக்காமல் செய்திடுங்க
கண்களுக்கு வெளியே அதனை அழகு படுத்துவதற்கு அதீத ஆர்வம் கொள்ளும் நாம் கண்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
செல்போன், டேப்லெட், கம்யூட்டர், டிவி என கண்ணைப் பாதிக்கும் விஷயங்களில் நாம் மூழ்கி கிடப்பதால் கண்களை சுற்றி கண் சோர்வு மற்றும் கரு வளையங்கள் உருவாகிறது.
கண்களுக்கு போதுமான ஓய்வு தவிர தினசரி உடற்பயிற்சி முக்கியம், அது பார்வை நரம்புகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க உதவுகிறது.
இங்கு கருவளையங்களை போக்கி கண்களைப் பிரகாசிக்க வைக்கும் சில வழிமுறைகளை காணலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க உதவும். அதனால் தினம்தோறும் தூங்குவதற்கு முன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யைக் கண்களுக்குக் கீழ் பகுதியில் விட்டு மசாஜ் செய்து வர கண்களில் உள்ள கருவளையம் மறைய தொடங்கும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் தோலில் ஒரு ஹைட்ரேட்டர் போல் செயல்படுகிறது. இது கருவளையத்தையும் குறைக்கும். பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சோர்வான கண்களுக்கு இது சிறந்த மருந்து. அதனால் செல்போன், டேப்லெட், கம்யூட்டர், டிவி என கண்ணுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து வர கண்சோர்வு குறையும்.
பால் மற்றும் பேக்கிங் சோடா
அதிகநேரம் கண் விழித்து வேலை பார்ப்பவரா நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கு இந்த முறை சரியாக இருக்கும். அதாவது 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலந்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பின்பு கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் தடவுங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படிச் செய்து வர உங்கள் கண்கள் புத்துயிர் பெறுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கிரீன் டீ
கருவளையத்திற்குப் பெரிய தீர்வு தேநீர் வகைகள். முதலில் தேநீர் பைகளை 5 முதல் 10 நிமிடங்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுங்கள். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களுக்குச் சிறந்த வரமாக அமையும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் பொதுவாகவே கண்களுக்குக் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது என்று அனைவர்க்கும் தெரியும். அதனால் வெள்ளரிக்காய் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து கண்களில் தடவி மசாஜ் செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால் உங்கள் கண்கள் குளிர்ச்சி பெறுவதோடு புத்துயிர் பெரும்.
அன்னாசி பழ மாஸ்க்
கண் வீக்கம் மற்றும் கருவளையத்திற்கு மற்றொரு தீர்வு, மஞ்சள் தூள் மற்றும் அன்னாசி பழச்சாறு. இந்த இரண்டையும் தேவையான அளவு கலந்து தினமும் பூசி வர கருவளையம் அறவே மறைந்து போகும்.