கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
கண்களை சுற்றி ஏற்படும் கருவளைய பிரச்சனையை இயற்கையான முறையில் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருவளையம்
இன்றைய காலத்தில் பெரும்பாலான இளம்தலைமுறையினர் அழகை கெடுப்பதில் கருவளையம் தான் முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது.
தூக்கமின்மை, மன அழுத்தம், ரத்த சோகை, அதிக திரைப்பயன்பாடு, மரபணு போன்ற காரணங்களால் கருவளையங்கள் ஏற்படுகின்றது.
இவை முக அழகை கெடுத்து சோர்வான தோற்றத்தை தருகின்றது. இதற்கான எளிய இயற்கை வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எளிய வீட்டு வைத்தியம்
தக்காளி சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து கருவளையத்தை சுற்றி தடவினால் 15 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவவும்.
இதே போன்று கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் கழுவவும்.
உருளைக்கிழங்கு சாறை கண்களைச் சுற்றி தடவி, உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 15 முதல் 20 நிமிடங்கள் வைக்கவும்.
காபி தூளும், பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து மசாஜ் செய்து காலையில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதே போன்று பாதாம் எண்ணெய்யை அல்லது தேங்காய் எண்ணெய்யை இரவில் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
கிரீன் டீ-க்கு பயன்படுத்தப்பட்ட பைகளை குளிர வைத்து கண்களின் மேல் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்கவும்.
ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கருவளையம் பகுதியில் 15 நிமிடம் வைக்கவும்.
இது மட்டுமின்றி சரியான தூக்கம், சீரான உணவுமுறை, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கருவளையங்கள் வராமல் தடுக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
