இந்த அறிகுறி மட்டும் இருந்தால் அது Omicron தான்: ஆய்வில் வெளிவந்த புது தகவல்
டெல்டா வைரசை காட்டிலும் 70 மடங்கு வேகமாக பரவக்கூடிய Omicron வைரஸ், நுரையீரலை பாதிக்கும் வேகம் மிக மிக குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மருத்துவ உலகை நிம்மதி பெருமூச்சு விடவைத்தாலும், மாறுபாடு கண்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஒமைக்ரானின் பொதுவான அறிகுறி என்ன என்று பெரும்பாலான நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதில் ஒட்டுமொத்தமாக இன்று ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. அந்த முடிவை உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி Omicron வைரசின் பொதுவான ஒரு அறிகுறி என்று தொண்டை பாதிப்பை வரையறுத்து உள்ளனர்.
Omicron பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தொண்டை வறட்சி பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
90 சதவீதம் பேருக்கு உடல்வலி இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டும்தான் Omicronனின் ஆரம்ப கால அறிகுறி என்று அறிவித்து உள்ளனர்.
சிலருக்கு காய்ச்சல் இருப்பதும் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆனால் Omicron பாதித்த பெரும்பாலானவர்கள் காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறி இல்லாமலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
You may like this...