ஒரு ஐஸ்க்ரீமின் விலை இத்தனை லட்சமா?? காரணம் இதுதானாம்!
பொதுவாகவே ஐஸ்க்ரீம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதன் சுவை,மணம்,ஜில்லென்ற தன்மைக்கு ரசிகர்கள் கோடி.
இந்நிலையில் ஒரு ஐஸ்க்ரீமின் விலை இந்திய மதிப்பின்படி 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகின்றதா?
ஆம், ஜப்பானில் cellato என்ற நிறுவம் உருவாக்கியுள்ள ஐஸ்க்ரீமே உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்க்ரீமாகும்.
image - ndtv
மற்ற ஐஸ்க்ரீம்களைப் போலத்தானே இதுவும் இருக்கும் பிறகு எதற்காக இவ்வளவு விலை என்று கேட்கலாம்..
ஆனால், இது மற்ற ஐஸ்க்ரீம்களைப் போல் இல்லாமல் தங்கத் துகள்கள், வெள்ளை truffle, Parmigiano Reggiano என்ற அரிய வகை சீஸூம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி அலாதியான சுவையையும், மனதைக் கவரும் வாசனையையும் இந்த ஐஸ்க்ரீம் கொண்டுள்ளது.
சுமார் ஒன்றரை வருட முயற்சியின் பின்னரே இந்த ஐஸ்க்ரீமை உருவா்ககியுள்ளதாக அந் நிறுவனம் கூறியுள்ளது.
image - time out