போட்டியின் போது நடுத்த பரபரப்பு.. மைதனாத்திலேயே மல்லாக்க படுத்த கிரிக்கெட் வீரர்கள்! வைரல் வீடியோ
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே தற்போது ஒரு நாள் போட்டி நடைப்பெற்று வருகிறது. தற்போது நடந்த மூன்றாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டியின் போது நடுவே நடந்த செயல் ஒன்று, சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இலங்கை அணி 38 ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் தேனீக்கள் வலம் வர ஆரம்பித்துள்ளது. அப்போது அதனைக்கண்ட வீரர்கள், தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டி, பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் உடனடியாக மைதானத்தில் குப்புற படுத்துக் கொண்டனர். இதனால், போட்டிக்கு நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தேனீக்கள் சென்ற பின்பு, போட்டி மீண்டும் நடைபெற்றது.
Bee ? attack in #WIvSri#INDvENGt20 #Cricket pic.twitter.com/KgA5as5myR
— Cricket Scorecards (@MittiDaPutla) March 14, 2021