வேலையை இழந்தாலும் EMI டென்ஷன் இல்லை... இதற்கும் இருக்கு காப்பீடு!
பொதுவாக தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழில் ரீதியில் முழுமையாக உத்தரவாதம் கிடைப்பதில்லை.பெரிய நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைகளை திடீரென பறிக்கும் நிலை அடிக்கடி ஏற்பகின்து.
அப்படி திடீரென வேலை இழந்தவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தான தெரிய வேண்டும் என்பது கிடையாது. இப்படி தொழிலை இழந்தவர்கள் கார் லோன் அல்லது வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் இது அவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும்.
இந்த பிரச்சனைக்கு முறையாக ஆயத்தத்துடன் இருந்தால் வேலை இழந்தாலும் EMI டென்ஷன் வராது. நீங்கள் உங்கள் வேலையை இழந்தாலும் கடனையோ அல்லது இஎம்ஐயையோ குறிப்பிட காலத்தில் சரியாக செலுத்துவதற்கு வேலை இழப்பு காப்பீடு செய்வது பெரிதும் துணைப்புரியும்.
ஆயுள் காப்பீடு பற்றி தெரிந்து வைத்திருக்கும் பலருக்கு வேலை இழப்பு காப்பீடு பற்றி தெரிந்திருப்பது அரிது. தற்காலத்தில் காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், NBFCகள் உங்கள் சம்பளம் மற்றும் வேலையை காப்பீடு செய்ய தயாராக இருக்கின்றது.
வேலை இழப்பு காப்பீடு என்றால் என்ன?
ஆயுள் காப்பீட்டின் ஒரு அம்சமாக வேலை இழப்பு காப்பீடு பார்க்கப்படுகின்றது. இது கடன் பாதுகாப்பு ஆயுள் காப்பீட்டு வடிவத்தில் பெற்றுக்கொள்ள முடியும். சில காப்பீட்டு நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுடன் சேர்த்து இந்த காப்பீட்டை விற்பனை செய்கின்றது. ஒரு சில நிறுவனங்களில் தனியாக வேலை இழப்பு காப்பீடு மாத்திரம் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
குறித்த காப்பீடு முழுநேர ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு வேலையை காப்பீடு செய்வதன் மூலம் திடீர் வேலை இழப்பு குறித்து பயத்துடன் வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
குறித்த காப்பீட்டை ஓய்வு பெற்றவர்கள், வேலையில்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது தற்காலிக பணியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாது.
மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் வயது அடிப்படையில் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. வேலை இழப்பு காப்பீடு செய்துக்கொள்வதன் மூலம் நீங்கள் 3 முதல் 4 EMI-களை வேலையை இழந்தாலும் மீண்டும் வேலை தேடும் வரையில் செலுத்த கூடியதாக இருக்கும்.
வேலை இழப்பு காப்பீடு குறித்து முழுமையாக விபரங்களை தெரிந்துக்கொண்டு வேலையை காப்பீடு செய்துக்கொள்வது தற்காலத்தை பொருத்தவரையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |