திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி... 7 வருட காதலின் விபரீதம்
திருமணமான காதலனை முன்னாள் காதலி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான காதலனை கடத்திய முன்னாள் காதலி
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், பிரியா என்ற 31 வயது பெண்னை கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்துள்ளார்.
இவரும் மென் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் பார்த்திபன் வேலைக்கு புறப்பட்ட நிலையில், மர்ம கும்பல் ஒன்று அவரைக் கடத்திச் சென்றது.
மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்து தடுத்த தாயையும் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளது. பின்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது காஞ்சிபுரத்தில் அடைத்து வைத்திருப்பதும் அம்பலமாகியுள்ளதுஇ
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 1 பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்ததில் பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா என்பது தெரியவந்துள்ளது.
கல்லூரி படிக்கும் இருவரும் காதலித்து வந்த நிலையில், 7 வருட காதல் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பார்த்திபன் நினைவாகவே இருந்த சவுந்தர்யா தனது தாயிடம் புலம்பி அழுதுள்ளார்.
இதனால் பார்த்திபனை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி வைத்துள்ளனர். பொலிசார் காதலி சவுந்தர்யா அவருக்கு உதவியாக இருந்த தாய், தாய்மாமன், சித்தப்பா உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |