இரவு பார்ட்டியில் போதையில் சுயநினைவு இல்லாமல் பிரபலங்கள்: 4 நடிகைகள் உட்பட ஒரு பிக்பாஸ் போட்டியாளர் கைது?
இந்தியாவில் மகாராஷ்டிராவில் பார்ட்டி என்ற பெயரில் போதையில் சுயநினைவினை இழந்த பிக்பாஸ் பிரபலம் உட்பட நான்கு நடிகைகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாசிக் மாவட்டத்திலுள்ள இரண்டு வில்லாக்களில் அரங்கேறிய போதை பார்ட்டியில், வெளியில் தெறிக்கவிடும் சத்தத்துடன் பாட்டுகளை போட்டு நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இந்த பார்ட்டியில் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் நாசிக் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே அங்கே காவலர்களுடன் விரைந்த எஸ்பி சச்சின் பட்டீல், குத்தாட்டம் போட்டவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.
இதில் 10 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள். இந்த 12 பேரில் நான்கு பேர் தென்னிந்திய சினிமா நடிகைகள், ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் என மொத்தம் 22 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் குறித்த நடிகைகள் பற்றியோ, பிக்பாஸ் பிரபலம் குறித்தோ பொலிசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், பொலிசார் இவர்களை கைது செய்கையில், பலரும் போதையில் சுய நினைவிழந்து கீழே கிடந்துள்ளனர். இந்த பார்ட்டிக்காகவே யாருக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமான சொகுசுபங்களாவை தேர்ந்தெடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.