இது கையா இல்லை இரும்பா?.. கைகளாலே மரத்தை உடைக்கும் சிறுமி; வைரல் வீடியோ
இந்த பறந்த விரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வினோதமான விஷயங்கள் இணைய வழியாக வெளியாகி நம்மை பிரமிக்க வைக்கிறது.
அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த எவ்னிகா சாத்வகாஸ் (Evnika Saavakass) என்ற 12 வயது சிறுமி தனது குத்துச்சண்டை திறமைக்காக இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.
அவர், ஒரு மரத்தின் மீது கைகளால் குத்தி உடைக்கிறார். இந்த வீடியோ காட்சி இணைத்தில் வைரலாகி வருகிறது. மேலும், எவ்னிகா சாத்வகாஸ் ஒரு தொழில்முறை குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும் அவரது தந்தை ருஸ்ட்ராம் சாத்வகாஸ் என்பவரால் பயிற்சி பெற்றவர்.
இதுகுறித்து அவர் தந்தை தெரிவிக்கையில், தனது மகளின் திறமையையும் குத்துச்சண்டையில் ஆர்வத்தையும் அவளுக்கு நான்கு வயதாக இருந்தபோது அடையாளம் கண்டுகொண்டதாகவும், இது ஒரு நல்ல குணாதிசயம். நான் உருவாக்க வேண்டியவற்றின் முதல் தீப்பொறியைக் கண்டேன் என்று கூறியுள்ளார்.
Evnika இப்போது ரஷ்யாவின் Voronezh பகுதியில் வாரத்திற்கு ஐந்து முறை தனது ஏழு உடன்பிறப்புகள் மற்றும் தந்தையுடன் குத்துச் சண்டை பயிற்சி பெறுகிறார் .
Watch Little Evnika Saadvakass also known as the 'World's Strongest Girl' punching down a tree using her Amazing boxing skills.
— Quarantine Traders (@QuarantineTrad1) January 8, 2022
Shes has been training hard since she was three and dreams of becoming a professional boxer one day. pic.twitter.com/A4ERWjB57b