Evion மாத்திரைகள் எதற்காக? பக்கவிளைவுகள் உண்டா?
வைட்டமின் ஈ ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த மாத்திரை Evion, நம் உடலுக்கு தேவையான மிக அத்தியாவசியமான வைட்டமின்களின் மிக முக்கியமானது வைட்டமின் ஈ.
நம் உடலின் செல்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஈ மிக அவசியம்.
இது சேதமடைந்த செல்களை சரிசெய்வதுடன் இன்னும் பல நன்மைகளை வழங்குகிறது.
வைட்டமின் ஈ குறைந்தால் என்ன நடக்கும்?
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் உடல் சோர்வு, பலவீனம், முடி, தோல் பாதிப்புகள் என எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரும்.
குறிப்பாக கல்லீரல் தொடர்பான நோய்களும் வரும் என்பதால் வைட்டமின் ஈ மிக இன்றியமையாத கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.
கை, கால்கள் மரத்துப்போவது, நடப்பதில் சிரமம், தசைகள் பலவீனம் ஆதல், பார்வை மங்குதல் என அன்றாட வாழ்வில் பல சிரமங்களை உண்டுபண்ணும்.
இதனை சரிசெய்வதற்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரையே Evion.
இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது.
கால் வலி, தசைகளில் வலியை போக்கும், உடல் மற்றும் தோலின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பக்கவிளைவுகள்
வயிற்றுப்போக்கு
மயக்கம்
தலைவலி
குமட்டல்
வயிற்றில் அசௌகரியம்
இது பொதுவான பக்கவிளைவுகளே, உங்களுக்கான தொந்தரவுகள் நீடிக்கும் பட்சத்தில் அல்லது கடுமையாகும் போது மருத்துவரை கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக்கொள்ளவும், மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் முழுமையும் தவறாமல் எடுக்கவும், சுயமாகவோ மருந்து கால அளவுகளை நீடிக்கவும், முன்னதாகவே நிறுத்தவும் கூடாது.
கர்ப்பணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் மற்றும் வேறு சில காரணங்களுக்காக மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
Evion மாத்திரைகளின் முழுமையான பலன்களை பெற மாலை அல்லது இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம், குறிப்பாக உணவுடன் எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |