இலங்கை கலாச்சார முறையில் திருமணம் செய்த ஐரோப்பிய தம்பதி - வைரல் புகைப்படம்
நேற்றைய தினம் ஐரோப்பிய தம்பதிகள் குடாவ கடற்கரையில் இலங்கை கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
வைரல் புகைப்படம்
இலங்கையின் புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரையில் நேற்று ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் என்ற தம்பதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ரோப்பிய தம்பதி இலங்கையின் அழகு மீதும் இலங்கையின் கலாச்சாரத்தின் மீதும் கொண்ட ஆர்வத்தினால் இந்த தம்பதி இலங்கை முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணமானது இலங்கை கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து நடத்தப்பட்டுள்ளது. இந்த திருமத்தை ஹோட்டலின் வேலையாட்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சேர்ந்து நடத்தி வைத்தனர்.
இந்த திருமணத்திருமமணம் நடைபெற்ற மணமேடையானது, தென்னோலைகளால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மணமக்களை மேடைக்கு அழைத்து வந்தனர், மேலும் அங்கு கலாச்சார முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.
பல்வேறு இன மக்கள் வாழும் கற்பிட்டி தீபகற்பத்தில் இத்தகைய நிகழ்வு அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டதை அடுத்து இந்த திருமண வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |