Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம்

Manchu
Report this article
எதிர்நீச்சல் சீரியலில் கதிரை அவரது அம்மா விசாலாட்சி பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். வெளியே சென்ற வீட்டு பெண்களும் வீட்டிற்கு திரும்புகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியே தங்களது வேலையை செய்ய முயற்சித்து வந்த நிலையில், அறிவுக்கரசியின் சதியால் அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக கதிரை விசாலாட்சி பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் வெளியே சென்ற பெண்களும் வீட்டிற்குள் வந்து போராட ஆரம்பிக்கின்றனர்.
நான்கு பேரையும் தனித்தனியாக தனது தம்பிகளை வைத்தே பிரிப்பதற்கு குணசேகரன் பயங்கர திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த யோசனையைக் கொடுத்தது அறிவுக்கரசி தான்.
இதுவரை விறுவிறுப்பில்லாமல் சென்ற எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
