Ethirneechal:திருமண மண்டபத்தில் பறிபோன ஒரு உயிர் - தப்பி பிழைக்க ஓடும் ஜனனி
அறிவுக்கரசி திருமண மண்டபத்தில் ஒரு கொலை செய்யும் நேரத்தில் ஜனனி மற்றும் பார்கவி ஜீவானந்தம் உயிர் தப்ப ஓடுகின்றனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியல் தற்போது இல்லதரிசிகள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. தற்போது தர்ஷன் திருமணத்தை வைத்து கதைக்களம் நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.
கெட்டவர்களுக்கு சாதகமாக இந்த சீரியலில் பல நன்மைகள் நடக்கும். ஒரு பக்கம் ஈஸ்வரி சுயநினைவின்றி இருக்கிறார்.
இன்னுமொரு பக்கம் ஜனனி மற்றும் பார்கவி ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இப்படி இருக்க குணசேகரனின் வீடியோ ஆதாரம் மற்றவர்களிடம் கிடைத்துள்ளது.
பறிபோன உயிர்
குணசேகரன் வீட்டிற்கு வந்து அறிவுக்கரசி வீசிய மொபைல் போனை சரிபார்த்த கரிகாலனின் நண்பன் வீடியோ ஆதாரத்தை திருடி அறிவுக்கரசியை மிரட்டி பணம் கேட்டுருந்தார்.
இதனால் அறிவுக்கரசி அவனை கொலை செய்யவும் தயங்காமல் அதையும் செய்து முடிக்கிறார். ஜனனி மற்றும் பார்கவி ஜீவானந்தம் குணசேகரன் ஆட்கள் தங்களை சூழ்ந்துள்ளதை சுதாரித்து உயிர் தப்ப ஓடுகின்றனர்.
இவ்வளவு பிரச்சனைகளில் திருமணம் நடக்க கூடாது என தர்ஷனை மண்டபத்தில் இருந்து நந்தினி வெளியே அழைத்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
