Ethirneechal: தொழிலதிபராக மாறும் மருமகள்கள்... மகிழ்ச்சியில் விசாலாட்சி! கடுப்பில் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி வீட்டு பெண்களுக்கு முழு ஆதரவாக இருந்து வரும் நிலையில், இதனை குணசேகரன் அவதானித்து பயங்கர கடுப்பில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், குடும்ப பெண்கள் மீண்டும் தொழில் தொடங்க உள்ளனர். இதற்காக வண்டி ஒன்றினை ஏற்பாடு செய்து அதற்கு பெயிண்ட் செய்து தயார் செய்துள்ளார்.
மருமகள்களின் இந்த செயலைப் பார்த்து மாமியார் விசாலாட்சி பயங்கர ஆனந்தத்தில் காணப்படுகின்றார். மேலும் மருமகள்களை ஊக்கப்படுத்தவும் செய்கின்றார்.

இந்நிலையில் வீட்டில் சமைத்து அதனை வண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என்று மருமகள்கள் மாமியாரிடம் கூறியுள்ளார்.
பெற்ற தாய் தனக்கு எதிராக இவ்வாறு நடந்து கொள்வதை அவதானித்த குணசேகரன் கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார். மேலும் குணசேகரனால் விசாலாட்சிக்கு வேறு ஏதும் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
இதுவரை கொடுமைகளை அனுபவித்து தற்போது முதன்முதலாக மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் பெண்களின் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |