தாலியை கழற்ற துணிந்த நந்தினி.. கன்னத்தில் பளார்னு விட்ட விசாலாட்சி! எதிர்நீச்சலின் எதிர்பாராத திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி நந்தினியை பளார் என அடித்துள்ளது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மாற்றப்பட்ட கதை
குணசேகரன் மரணத்திற்கு பின்பு சீரியலின் கதைகளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அண்ணன் இருப்பது போன்று கதை கொண்டு செல்லப்படுகின்றது.
எதிர்நீச்சலில் வேஷ்டி அணிந்து இறங்கி வந்த நபர் யார்?... எதிர்பாராத திருப்பத்தால் அதிருப்தியில் மக்கள்
நந்தினி சமையல் ஆர்டர் எடுத்து செய்து வந்த நிலையில், வீட்டின் நெருக்கடியில் அதனை செய்ய முடியாமல் தவிக்கின்றார். முன்பணம் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து சண்டையிட்ட நிலையில், தாலியை கழற்றி கொடுக்க சென்றார்.
உடனே மாமியார் விசாலாட்சி பளார் என்று நந்தினியை கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.