மொத்தமாக கொளுந்து விட்டு எரியும் ஜனனியின் கனவுகள்.. அறிவுக்கரிசி ஆட்டம் ஆரம்பம்
இவ்வளவ நாட்களாக போராடிய ஜனனியின் கனவுகளை குணசேகரன் மொத்தமாக தீ வைத்து கொளுத்தி விட்டார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியல் தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, இரண்டாவது பாகத்தையும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. தன்னால் முடிந்தளவு பெண்களை அடிமைகளாக வைத்திருக்க நினைத்த குணசேகரன் வாழ்க்கையில் பெரிய புயலாக தேவகி கதை மாறியுள்ளது.
சக்தி தான் ராணா என்கிற சந்தேகத்தை கதைக்களம் துண்டியது. ஆனால் சக்தி மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் குணசேகரன் அவருடைய தம்பிகளுடன் தலைமறைவாக இருக்கிறார்கள்.
ஜனனி இதுவரையில் குணசேகரன் மீது ஏகப்பட்ட புகார்களை கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு பிரச்சினை
இந்த நிலையில், முதல் தடவையாக குணசேகரனுக்கு எதிராக திரும்பிய விசாலாட்சி வீட்டிலுள்ள மருமகள்களின் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் அறிவுக்கரசி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் குணசேகரன் நந்தினி ஆரம்பித்திருக்கும் தள்ளுவண்டி உணவகத்தை கொளுத்தி விடுமாறு கூறுகிறார்.
இதனால் வீட்டிலுள்ளவர்கள் உறங்கிய பின்னர், முல்லை பெற்றோலை வண்டியில் ஊற்றி நந்தினியின் கனவை நெருப்பில் கருகச் செய்துள்ளார். அத்துடன் இனி தான் என்னுடைய ஆட்டம் ஆரம்பம் என குணசேகரனிடம் அறிவுக்கரசி புதிய சவால் ஒன்றையும் கூறுகிறார்.
ஜனனியும் அதற்கு ஏற்றால் போன்று அறிவுக்கரசியை அதே வீட்டில் தங்க வைக்கிறார். மற்றுமொரு அடியாக விழுந்த சம்பவத்திற்கு ஜனனி என்ன மாற்றீடு செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |