கதிர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சக்தி..உச்சக்கட்ட கடுப்பில் ஈஸ்வரி- மனம் மாறுவாரா?
கதிர், ஈஸ்வரியை தவறாக பேசியதால் கடுப்பான சக்தி ஓங்கி அறைந்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.
வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள்.
மனம் மாறுவாரா?
இந்த நிலையில் மாமியாரின் அழைப்பை ஏற்று ஈஸ்வரி மறுபடியும் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்.
அப்போது கதிர், “அண்ணனை ஜெயிலில் வைத்து விட்டு கூத்தாடுறீயா?” என கேட்க, அதனை பொறுத்து கொள்ள முடியாத சக்தி கதிர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
இவ்வளவு பிரச்சினை நடந்தும் விசாலாட்சி அவரின் முடிவில் இருந்து மாறவில்லை. ஈஸ்வரியை மீண்டும் இதே வீட்டில் இருக்குமாறு கேட்கிறார்.
அசிங்கமாக பேசும் குடும்பத்தினர் முன்னிலையில், ஈஸ்வரி என்ன செய்யப்போகிறார் என்பதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |