கதிரின் சூட்சமங்களை அறியும் குணசேகரன்- காணாமல் போன தர்ஷா மாமனார்.. நடந்தது என்ன?
விடுதலையான குணசேகரனிடம் கதிர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதனை சக்தி தெட்ட தெளிவாக கூறி விடுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அறைக்கப்பட்டார்.
அதன் பின்னர், வீட்டு தேவைகளுக்காக பணம் வேண்டும் என குணசேகரனிடம் பேசி, கதிர் அவருடைய மொத்த சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், குணசேகரன் சிறையில் இருக்கும் பொழுது அவருடன் இருந்த ஒரு அறிவுக்கரசி குடும்பத்துடன் மகனுக்கு சம்பந்தம் பேசி, புது பிரச்சினையை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
விடுதலையானவுடன் வேலையை ஆரம்பித்த குணசேகரன்
இந்த நிலையில், சிறையில் இருந்து வீட்டிற்கு வரும் குணசேகரனுக்கு ஆர்த்தி எடுப்பதற்காக மருமகள்கள் யாரும் வராத நிலையில், ஐஸ்வர்யா ஆர்த்தி எடுக்கச் செல்கிறார்.
அப்போது கதிர், ஆர்த்தி தட்டை தட்டி விட்டு மருமகள்கள் ஆர்த்தி எடுக்க வேண்டும் என பிரச்சினையை ஆரம்பிக்கிறார். குணசேகரன் வெளியில் வந்தவுடன் அவரை வீட்டிற்குள் நுழைய விடாமல் மருமகள்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் குணசேகரன் அறிவுக்கரசி வீட்டிற்கு சென்றுள்ளார்.
குணசேகரனை அறிவுக்கரசி வீட்டில் பார்க்க வந்த சக்தியை அவரை பார்க்க விடாமல் கதிர் தடுக்கிறார். அப்போது கடுப்பான சக்தி,“உன்னோட பணத்தை இவ வட்டிக்கு விட்டு சம்பாரிக்கிறான்..”என கதிரின் வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை குணசேகரனும் புரிந்து கொள்ளாமல் கதிருக்கு ஆதரவு கொடுத்து பேசுகிறார்.
இப்படி இருக்கும் பட்சத்தில் அறிவுக்கரசி தர்ஷா காதலியின் அப்பாவை கடத்தியுள்ளார். அவரை தேடி பதறிப்போன பெண், ஜனனியிடம் உதவிக் கேட்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
