தர்ஷாவுக்கு வரும் ஆபத்து- ஜோதிடர் கணிப்பால் மிரண்டு போன ஈஸ்வரி.. இனி நடக்கப்போவது என்ன?
தர்ஷாவுக்கு ஆபத்து வரப்போவதாக ஜோதிடர் கணித்து கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.
தர்ஷாவுக்கு வரும் ஆபத்து
இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார்.
தர்ஷாவுக்கு ஒரு காதல் இருப்பது போன்று கடந்த எபிசோட்களில் காட்டப்பட்டது. ஆனாலும் திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறார்.
இந்த திருமணத்தை சாக்காக வைத்து குணசேகரன் குடும்பத்திற்குள் புதிய வரவு ஒன்று இருக்கிறது. அவர் இந்த குடும்பத்தை பழிவாங்க வந்தவர் போல் தெரிகிறார்.
அவர் தர்ஷாவின் வாழ்க்கையில் முடிவெடுப்பது ஈஸ்வரிக்கு விருப்பம் இல்லை. இதனால் அவரிடம்,“என் மகன் வாழ்க்கையில் முடிவெடுக்க நீ யார்?” என ஈஸ்வரி கொந்தளிக்கிறார். ஆனாலும் அவர் அடங்குவது போல் தெரியவில்லை.
திருமணம் பற்றி பேச வந்த ஜோதிடர்,“தர்ஷாவுக்கு ஆபத்து வரப்போகிறது கவனமாக இருக்க வேண்டும்..” என எச்சரித்துள்ளார். இதனை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியானதுடன் விசாலாட்சி முடிவை மாற்றுவாரா? என காத்திருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |