காணாமல் போன ஐசு.. தேடி அலையும் குடும்பத்தினர்- ஆண் நண்பருடன் சென்றாரா?
காணாமல் போன ஐஸ்வர்யா ஆண் நண்பருடன் பழக்கத்தில் இருந்ததாக சக்தி- ஜனனிக்கு தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.
ஆண் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்
இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டு குணசேகரன் தர்ஷாவுக்கு சம்பந்தம் பேசி முடித்துள்ளார். இதில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் ஈஸ்வரிக்கு எதிராக தர்ஷா திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறுகிறார்.
கதிருடன் இணைந்து அப்பாவை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும் தர்ஷாவை கதிர் மனம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார்.
இப்படியொரு நிலையில், ஞானம் பணம் கொடுக்க முடியாது எனக் கூறியதால் குழப்பமடைந்த ஐஸ்வர்யா மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஐஸ்வர்யாவை காணவில்லை என வீட்டிலுள்ளவர்கள் பதற்றமாக தேடி வருகிறார்கள்.
அப்போது ஆசிரியர் ஒருவர், “ ஐஸ்வர்யா கடந்த சில நாட்களாக ஒரு பையனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்...” என்ற செய்தியை ஜனனி- சக்தியிடம் கூறுகிறார். சில சமயங்களில் ஐஸ்வர்யா அவருடன் தான் சென்றிருப்பாரா? என இவர்கள் இருவரும் சந்தேகித்து தேடி வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |