Ethirneechal: கல்யாண பெண்ணாக ஆசி வாங்கும் பார்கவி - தடபுடலாக நடக்கப்போகும் திருமணம்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி கல்யாண பெண்ணாக தயாராகி பார்கவி ஜீவாநன்தத்திடம் ஆசி வாங்கும் நிலையில் ஜீவானந்தம் பார்கவிக்கு வாக்கு கொடுக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது. இதில் ஈஸ்வரி உயிர் பிழைப்பாரா? என்ற கெள்வியில் குணசேகரனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த நிலையில் அறிவுக்கரசி தன் தங்கையை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க தடபுடலாக தயாராகி கொண்டு வருகிறார்.
தர்ஷனை எப்படியாவது தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவுக்கரசி போதை பொருளை தர்ஷனுக்கு கொடுத்து அவனை சுயநனவு இன்றி வைத்துள்ளார்.
மயக்கத்தில் தர்ஷன்
அந்த பக்கம் பார்கவி தர்ஷனை திருமணம் கொள்ள முழமனதுடன் சம்மதித்து தயாராகி நிற்கிறார்.
இதற்கிடையில் பார்கவிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஜீவானந்தம் வாக்கு கொடுக்கிறார்.
அந்த பக்கம் தர்ஷனை போதையில் இருந்தபடியே சக்தி கீழே அழைத்து வந்து இவன் பழைய நிலைக்கு மாற வேண்டும் என தன் அண்ணனிடம் கேட்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |