குணசேகரன் விரித்த வலையில் தர்ஷன்.. பதறும் ஈஸ்வரி- இனி நடக்கப்போவது என்ன?
தர்ஷனனை கண்டுபிடிப்பதற்காக ஈஸ்வரியையும் மற்ற மருமகள்களையும் ஏமாற்றிய குணசேகரன் அவருடைய சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அதே சமயம், வீட்டிலுள்ள பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அறிவுக்கரசியின் பாதுகாப்பில் இருந்த தர்ஷன் மற்றும் ஊரை விட்டுச் சென்ற பார்கவி அவரது தந்தை அனைவரும் கொடைக்கானலில் ஜீவானந்திடம் சேர்ந்துள்ளனர்.
பளார் என விழுந்த அறை
வீட்டில், திருமணம் நடக்கும் வரை கதைக்களம் ஒரே பரபரப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கதிர், அறிவுக்கரசி இருவரும் தர்ஷனனை தேடி அழைந்து கொண்டிருக்கிறார். மாறாக இவர்கள் தேடும் தர்ஷன் மற்றும் அவரின் காதல் பார்கவி இருவரும் ஜீவானந்தம் இருப்பதால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயம் குணசேகரன் அழைத்து, ” உன்னுடைய தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்..” எனக் கூறி விட்டு கோலை வைத்து விடுகிறார். இந்த தகவல் கேட்ட அறிவுக்கரசி ஆடிப்போனதுடன், கதிரும் இனி என்ன செய்வது என புரியாமல் வீட்டிற்கு வந்த கேட்கும் பொழுது ஜனனி,“ அவருடைய மகன் விடயத்தில் அவர் முடிவு எடுக்கட்டும். யாரும் தலையிட வேண்டாம்..” என்கிறார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னரே குணசேகரன் கோல் செய்து ஜீவானந்தம் உடன் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இவர் நடிப்பை பார்க்கும் பொழுது உண்மையில் குணசேகரன் மனம் மாறி விட்டார் என்றால் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கோபமாக வீட்டுக்கு வந்த அறிவுக்கரசியை குணசேகரன் பளார் என அறைந்து வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு கூறுகிறார். இதனை பார்த்து கொண்டிருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சியாக உள்ளது.
சீறி பாய்ந்த அறிவுக்கரசி
இதனை தொடர்ந்து மெதுவாக தர்ஷனனை வீட்டிற்கு வரவழைத்த பின்னர், அறிவுக்கரசி கடும் வெறியுடன் தர்ஷனனை நோக்கி ஓடி வருகிறார். வீட்டில் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த குணசேகரனும் எறிமலையாக வெடிக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர், ஜீவானந்தம்- குணசேகரன் இருவரும் சந்திக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இருவரும் எப்படி மோதிக் கொள்கிறார்கள் என்பதை பொறுமையாக பார்க்கலாம்.
ஆனால் ஈஸ்வரியுடன் சேர்த்து வீட்டிலுள்ள மருமகள்களை நடித்து குணசேகரன் ஏமாற்றி செய்தியை எப்படி தாங்குவார்கள் என்பதும் கேள்விகுறியாகவே உள்ளது. புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |