Ethirneechal: ஈஸ்வரிக்காக போராடும் விசாலாட்சி.. குணசேகரன் போட்ட கண்டிஷன்
குணசேகரன் எப்படியாவது ஈஸ்வரி கொன்று விடலாம் என முடிவுச் செய்து அவருடைய கழுத்தை நெறிச்சு தள்ளிவிட்டுள்ளார். இந்த விடயத்தை தெரிந்து கொண்ட அறிவுக்கரசிக்கு பயம் வந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எதிர்நீச்சல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இயக்குநர், இரண்டாவது பாகத்தை ஆரம்பித்து நாளுக்கு நாள் பரபரப்பை அதிகமாக்கி வருகிறார்.
தன்னை மீறி யாரும் இல்லை என ஆணவத்துடன் இருந்த குணசேகரனை அடக்க வந்த ஜனனியுடன் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் கைக்கோர்க்கிறார்கள்.
இதுவரை காலமும் தன்னுடைய வாழ்க்கைக்காக போராடிய பெண்கள், தற்போது பிள்ளைகளுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காகவும் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அறிவுக்கரசியின் தங்கையான அன்புக்கரசியை தர்ஷனனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என குணசேகரன் தீவிரமாக இருக்கிறார்.
அதற்கு தர்ஷன் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனாலும் குணசேகரன் தந்தை என்பதால் எந்த முடிவிலும் தலையிட முடியாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
ஈஸ்வரியை பார்க்க ஏங்கும் விசாலாட்சி
இதற்கிடையில், குணசேகரன்- ஈஸ்வரி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஈஸ்வரி மருத்துவமனையில் சுய நினைவை இழந்து இருக்கிறார். இந்த விடயம் தெரிந்த பார்கவி ஈஸ்வரியை பார்க்க வருவார் என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
என்ன தான் ஈஸ்வரியுடன் விசாலாட்சிக்கு சண்டையிருந்தாலும், அவரை சென்று மருத்துவமனையில் பார்ப்பதற்காக அழுதுக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் வேளையில் ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்றால் அவரை யார் என்ன செய்தார்? என்ற சந்தேகம் அறிவுக்கரசிக்கு வந்துள்ளது. இனி வரும் கதைக்களம் சூடுபிடிக்கும் வகையில் உள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |