ஆதி குணசேகரனை இனி காட்டப் போவதில்லை - எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் உடைத்த உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகனாக இருந்த மாரிமுத்து சில வாரத்திற்கு முன்பு மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரைக் குறித்து குறித்த சீரியலில் இயக்குனர் பேசியுள்ளார்.
எதிர்நீச்சல்
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
இயக்குனர் திருச்செல்வம் கூறியது என்ன?
இயக்குனர் திருச்செல்வம் பேசுகையில், எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் அவரது கதாபாத்திரத்திற்கு எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்திருக்கின்றார். மேலும் பாராட்டை அவர் அதிகமாக விரும்புவதுடன், மற்றவர்களையும் பாராட்டுவார்.
குறித்த சீரியலைப் பொருத்தவரை அவரது கதாபாத்திரத்தை கதாபாத்திரமாக பார்க்காமல் அதையும் தாண்டி சென்றுவிட்டார். குறித்த சீரியலில் மாரிமுத்துவின் இருப்பை எங்கேயும் தள்ளி வைக்க முடியவில்லை... மற்றொரு புறம் சீரியலில் அவர் மறைந்த பின்பு கதாபாத்திரத்தை கொண்டு வந்து ட்ராமா செய்யவும் விருப்பமில்லை.
நாங்கள் ஆதி குணசேகரனை தேடிக்கொண்டு தான் இருக்கின்றோம். இனி அவரை நாங்கள் காட்ட மாட்டோம் என்று கூறிவிட்டோம். அவர் மறைந்த பின்பும் அவர் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கின்றது. அது காட்ட வேண்டும் என்றால் காட்டியிருக்கலாம். அது வேறுமாதிரி ஆவதுடன், மனஅழுத்தம் வந்துவிடுவதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |