எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் மகளா இது? வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் காணொளி
எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வத்தின் மகள் திருமண வரவேற்பு நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ள காணொளி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியல் மூலம் சமூகத்தில் ஆணாதிக்கம் கொண்ட நபர்களுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுத்தவர் தான் திருச்செல்வம்.
குறித்த சீரியலை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமையுடன் இந்த சீரியல் முடிவடைந்தது.
மற்ற ரிவி சேனல்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஒளிபரப்பான இந்த சீரியல் நிறைவடைந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.
இதில் குணசேகரனாக நடித்த மாரிமுத்துவினால் இந்த சீரியல் பயங்கர டாப்பில் இருந்தது. இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து ஒருவழியாக குறித்த சீரியலும் நிறைவடைந்தது.
இயக்குனர் மகளுக்கு நிச்சயதார்த்தம்
எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் மகள் பிரியாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதனை பிரபல ரிவியின் தொகுப்பாளர் அசார் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதில் சீரியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |