தாய்க்கு இரண்டாவது திருமணம்! அரங்கத்தில் பேசி சம்மதம் வாங்கிய மகள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைப்பதற்கு மகள் அரங்கத்தில் வைத்து தாயிடம் சம்மதம் வாங்கியுள்ளார்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் இளமையாக தோற்றமளிக்கும் அம்மாக்கள் மற்றும் மகள்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இளமையாக இருக்கும் தாய்க்கு மகள் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு கேட்டுள்ளார். இதுநாள் வரையிலும் சம்மதிக்காத அம்மா தற்போது தமிழா தமிழா மேடையில் வைத்து சம்மதம் தெரிவித்துள்ளார்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |