நீயே எச்சி கைய கொண்டு காக்கா விரட்டமாட்டே.. குணசேகரனை கலாய்க்கும் கரிகாலன்! பரபரப்பான ப்ரோமோ
“நீயே எச்சி கைய கொண்டு காக்கா விரட்டமாட்டே..“ என குணசேகரனை கரிகாலன் பங்கமாய் கலாய்த்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை எதிர்நீச்சல் சீரியல் பிடித்து கொள்கிறது.
அத்துடன் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த சீரியலில் வரும் ஆதி குணசேகரன் பேச்சுக்கள் நடவடிக்கைகள் மற்றும் வசனங்கள் இணையத்தில் மீம்ஸ்களாக வைரலாக்கப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து அப்பத்தாவிடம் இருக்கும் சொத்துக்களை எப்படியாவது தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என குணசேகரன் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜீவானந்தம் என்ற கதாபாத்திரம் எதிர்நீச்சல் சீரியலை மாற்றி போட்டுள்ளது. ஈஸ்வரியின் முன்னாள் காதலனாக என்றிக் கொடுத்த ஜீவானந்தம் கதையில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியுள்ளளார்.
கலாய்க்கும் கரிகாலன்
குணசேகரனுக்கு இந்த விடயம் தெரிய வரும் பொழுது அவர் ஈஸ்வரிக்கு விவாகரத்து தர போகிறேன் என கூறி அவரின் அப்பா முதற் கொண்டு பெரியார்களை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், கரிகாலன் - ஆதிரை இருவருக்கும் ஹனிமூன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. இதற்காக ஊட்டியை தெரிவு செய்துள்ளார்கள்.
இந்த இடம் கரிகாலனுக்கு பிடிக்கவில்லை இதனால் குணசேகரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கரிகாலன், “ நீயே எச்சி கைய கொண்டு காக்கா விரட்டமாட்டே.. ” என குணசேகரின் நடவடிக்கைகளை கலாய்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து சக்தி - ஜனனி அவர்களின் புதிய கம்பனியை துவங்க ஒரு நல்ல நாள் பார்த்து தருமாறு விசாலாட்சியிடம் கூறுகின்றார்கள்.
இத்துடன் இன்றைய தினம் எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.