நியூயார்க்கில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல்... ஃபர்ஹானா வெளியிட்ட காணொளி
எதிர்நீச்சல் சீரியல் நியூயார்க்கில் ஒளிபரப்பட்ட நிலையில், இதனை ஃபர்ஹானா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை மீட்க வீட்டில் உள்ள பெண்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஜீவானந்தத்திற்கு பிஏ-வாக வேலை செய்து வருகின்றார் ஃபர்ஹானா.
நியூயார்க்கில் எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் ஃபர்ஹானா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் ஜீபா ஷெரின். இவர் சீரியலிலும் முஸ்லீம் பெண்ணாகவே நடித்து வருகின்றார்.
முதல்முறையாக சீரியலில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முஸ்லீம் நடிகை நான் தான் என்று பெருமிதத்துடன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள முக்கிய வீதியில் ஜீபாவின் வீடியோ ஒளிபரப்பாகி உள்ளது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரில் பகிர்ந்துள்ள ஜீபா “ இந்த அன்பை இந்த உலகத்திடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |