குணசேகரன் இல்லாமல் தொடரும் சீரியல்: வீட்டு ஆண்களை எதிர்க்கத் துணிந்த மருமகள்கள்... சோகத்தில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய ப்ரோமோவில் ஆதிகுணசேகரன் இல்லாமல் ஒளிபரப்பாகி இருக்கிறது இந்தக் காட்சி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் தான் தற்போது மற்ற சீரியல்களோடு போட்டிப் போட்டு கொண்டிருக்கிறது.
இன்றைய ப்ரோமோவில்
இந்நிலையில், இன்றைய ப்ரோமோ காட்சியில், வீட்டு மருமகள்கள் எல்லோரும் தனக்கென தன் திறமையைக் கொண்டு சுயதொழிலில் இறங்கியிருக்கிறார்கள்.
இதனை எதிர்த்துக் கேட்ட ஞானத்தை அவரது மனைவி ரேணுகா ”உங்களுக்கு பயந்து பயந்து இனிமே எல்லாதையு பண்ணிகிட்டு இருக்க முடியாது, காலம் பூரா உங்க அண்ணனுக்கு கூஜா தூக்குற வேலைய மட்டு பாருங்க” என விளாசியிருக்கிறார்.
மேலும், இந்த ப்ரோமோவில் மறைந்த நடிகர் ஆதிகுணசேகரன் என்கிற மாரிமுத்து இல்லாமல் தான் வெளியாகியிருக்கிறது. இவரின் பேச்சும் நடிப்பும் இனி இல்லை என்று மக்கள் கலங்கி பல கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |