காதலன் அருணால் அவமானப்படுத்தப்படும் ஆதிரை... அம்பலமாகிய குணசேகரனின் நாடகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் நாடகம் அம்பலமாகியுள்ள நிலையில், ஆதிரையை அவரது முன்னாள் காதலான அருண் அவமானப்படுத்தியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனால் ஜீவானந்த்தினை பற்றி தெரிந்து கொள்ள ஜனனி மற்றும் சக்தி இருவரும் அவரது கிராமத்திற்கு சென்றுள்ளனர். வீட்டில் இருப்பவர்கள் இருவரையும் தேடுகின்றனர்.
மற்றொரு புறத்தில் ஜீவானந்தத்தினை பழிவாங்க சென்னையில் உள்ள ரவுடியை காண செய்வதாக கூறி சென்ற குணசேகரன், வளவனை சந்திக்கின்றார்.
நேற்றைய தினத்தில் ஆதிரையை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக கல்யாண மண்டபத்தை கதிர் பெயரில் கரிகாலனின் அப்பா கையெழுத்து போட்டு கொடுத்ததாக ஜான்சி ராணி மொத்த உண்மையையும் உடைத்திருக்கிறார்.
இதனால் கரிகாலனோடு ஆதிரை வாழ்வாளா? இல்லையா? என்பது தெரியாமல் வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று ஜான்சி ராணி கம்பீரகமாக கூறியுள்ளார்.
முன்னாள் காதலனை சந்தித்த ஆதிரை
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், ஆதிரை அருணை சந்திக்க எஸ்கேஆர் வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் அருண் முகத்தில் அடிபட்டு இருக்கிறது.அதோடு கால் நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து வருகிறார்.
அப்போது எஸ்கேஆர் தம்பி அரசுவிடம் ஆதிரை "ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கோங்க" என்று கெஞ்சி கொண்டு இருக்க, சாருலதா யோசித்தபடி நிற்கிறார். அதற்கு அரசு, "இவா வந்து இருக்கான்னு தெரிஞ்சா, அண்ணன் என்ன சொல்லுவாருன்னு தெரியுமா..?" என்று கேட்கிறார்.
ஆதிரை அழுது கொண்டிருக்க, அருண் ஆதிரை என்ற பொண்ணு இனி என் வாழ்க்கையில இல்லை.. கிளம்ப சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து வளவனிடம் பேசிக் கொண்டிருக்கும் குணசேகரன் எதார்த்தமாக கையை மேலே தூக்கி விடுகிறார். இதனால் குணசேகரன் வீட்டிற்காக நடித்து வருகின்றார் என்பது அம்பலமாகியுள்ளது.