குணசேகரன் இல்லாத எதிர்நீச்சலின் உண்மை நிலை: நிஜ வலியை கண்முன் காட்டிய ப்ரோமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் மிகப் பெரிய இழப்பாக இருக்கிறது ஆதிகுணசேகரனின் மரணம். அதனால் அவரின் இடத்தை நிரப்புவதற்காக புதிய முயற்சியை கையாண்டு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இன்றைய ப்ரோமோ
கடந்த சில நாட்களாக ஆதிகுணசேகரன் இல்லாமல் சில பழைய காட்சிகளை எடுத்து சமாளித்து வந்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இதை இப்படியே தொடர இயலாத காரணத்தால் வீட்டில் நடக்கும் சில விடயங்களை வைத்து மனம் நொந்து வீட்டிலிருந்து கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறிய காட்சிகளை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர்.
அவர் நிஜத்திலும் இல்லை சீரியலிலும் இல்லை என்று அறிந்துக் கொண்டு தங்களின் நிஜ மன கவலையை இன்றைய எபிசோட்டில் வெளியிட்டுள்ளார்கள். மேலும், இனி சீரியலின் கதி என்ன? ஆதிகுணசேகரனின் கதாப்பாத்திரத்திற்கு வேறு யாராவது வருவார்களா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் பல கேள்விகளைக் கேட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |