கோபத்தில் பொங்கிய நந்தினி- கதிரை வலைச்சு போட்ட குணசேகரன்- விஷேசம் நடக்குமா?
ஐஸ்வர்யாவுக்கு எப்படியாவது விஷேசம் நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் நந்தினியும் வீட்டிலுள்ள பெண்களும் நினைக்கும் பொழுது குணசேகரன் இடையில் புகுந்து கதையை மாற்றியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது. படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது.
ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
கொந்தளிப்பில் நந்தினி
இப்படி பல பிரச்சினை வீட்டில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, குணசேகரனுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் வீட்டில் மறுபடியும் குழப்பங்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன.
பெரிய பெண்ணான ஐஸ்வர்யாவுக்கு எப்படியாவது விஷேசம் வைத்து விட வேண்டும் என நந்தினி ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கதிரிடம் பேசி அவரை மனதை குணசேகரன் மாற்றியுள்ளார்.
“வீட்டில் நான் வந்து இருக்கும் சூழ்நிலை இருந்தால் தான் இருப்பேன்..” என தம்பிகளை ஏற்றி விடுகிறார். இதனால் அவர்களும் வீட்டிலுள்ள பெண்களை எப்படி சமாளிக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் எந்த விஷேசமும் செய்யக் கூடாது என்ற முடிவில் விசாலாட்சியும், ஜான்சி ராணியும் இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |