Ethirneechal: மோசமாகும் ஈஸ்வரியின் நிலை.. வாசலோடு நிற்கும் மருமகள்- குணசேகரன் தேடும் ஆதாரம் என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக திருமணம் செய்து வந்த மருமகள் பார்கவி வாசலோடு நிற்கும் வேளையில் ஈஸ்வரியின் உடல்நிலை தற்போது மோசமாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
தர்ஷனனின் நிலையை புரிந்து கொண்ட சக்தி மருத்துவர் ஒருவரை அழைத்து தர்ஷனின் மயக்கத்தை தெளிய வைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சீரியலில் தர்ஷன் திருமணத்தை மையமாக வைத்து குணசேகரனுக்கும் வீட்டு மருமகள்களும் பலத்த சண்டை போடும் காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கின்றன.
பழிவாங்க அன்பு எடுத்த புதிய அவதாரம்
இப்படி சீரியலில் தர்ஷன் திருமணம் பொலிஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. அதன் பின்னர், அன்புக்கரசி அவருடைய ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருந்தார்.
இந்த பிரச்சினை ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், மருத்துவமனையில் இருக்கும் ஈஸ்வரியின் உடல்நலம் மோசமாகிக் கொண்டிருக்கிறது.
இதனை அறிந்து கொண்டு வீட்டிற்கு செல்லும் பார்கவி- தர்ஷன் இருவரும் வெளியிலேயே நிற்கிறார்கள். கதிர், ஞானம் இருவரும் வீட்டிற்கு உள்ளே செல்ல விடாமல் மறைத்து நிற்கிறார்கள்.
தம்பிகள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தை பயன்படுத்திய குணசேகரன் தான் மறைத்து வைத்திருக்கும் ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் சக்தி அதனை முன்னரே எடுத்து மறைத்து வைத்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |